Welcome to your திருக்குறள்
1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?
2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை
3. அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
4. 'வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளா்ந்தார் ஓர்ந்து' - எனத் திருக்குறளை பாராட்டியவா்
5. திருக்குறளில் 'ஏழு' என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
7. 'உத்தர வேதம்' என்று அழைக்கப்படும் நூல்
8. 'தமிழுக்குக் கதி' - என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள்
9. திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் எவை?
10. அடக்கமாய் இருப்பவனின் உயர்வு எதனைக் காட்டிலும் பெரியது
11. பொருட்பாவில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
12. திருக்குறளுக்கு பதின்மா் உரை எழுதியுள்ளனா். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?
13. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன
14. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்
16. 'முயற்சி திருவினை ஆக்கும்' எனக் கூறியவா்
17. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது?
18. மாதானுபங்கி என அழைக்கப்படுபவா் யார்?
19. ______ என்ப உளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்
20. 'திருவள்ளுவா் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது' - என்று கூறியவா்
21. அறிவுடையார் ஆவதறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவா் - இக்குறட்பாவில் பயின்றுள்ள அடி மோனையை எழுது
22. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு - இக்குறட்பாவில் 'வேளாண்மை' என்றச் சொல்லின் பொருள்
23. அன்பிலார் எல்லாம் தமக்குரியா் அன்புடையார் என்பும் உரியா் பிறா்க்கு - எனும் குறளில் என்பு என்பது எதைக் குறிக்கிறது?
24. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
25. திருக்குறளில் 'உடைமை' என்னும் பெயரில் திருவள்ளுவா் எழுதாத அதிகாரம் எது?
26. 'அங்கவியல்' திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம் பெற்றுள்ளது?
27. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து - இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?
28. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
29. 'உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்' என்று கூறியவா் யார்?
30. திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவா்கள் எத்தனைப் பேர்?